இழுத்து விடும் மூச்சுக்காற்றில்

இழுத்து விடும்
எனது மூச்சுக் காற்றின்
இளஞ்சூட்டில் ஒளிந்திருக்கும்
நிலவின் குளிர்ச்சியை
நீ மட்டும்தானே அறிந்தாய்..
இது வரையிலும்
நிலவும் கதிரும்
இரட்டைத்தண்டவாளங்கள்
உனக்கும் எனக்குமிடையில்
ஒன்றில் நீ உரசிப் போவது
அடியில் தேயும்
என் நினைவுகளைத்தான்..
எத்தனை முறை வேண்டுமானாலும்
உரசிப் போ..
உயிர் என்னுள்
ஒட்டியிருக்கும் வரை!

எழுதியவர் : ருத்ரன் (3-Mar-16, 11:14 am)
சேர்த்தது : ருத்ரன் 85
பார்வை : 587

மேலே