பைத்தியக்காரனின் பசி

சுட்டது பழம்
சுடாத நெருப்பால்
பட்டது அனுபவம்
பரமனின் பிள்ளை
கற்றது அதிகம்
பெற்றது கொஞ்சம்
தனக்கே மாலையிடும்
தற்குறிகளின் நெஞ்சம்
வக்கிரங்கள் விற்பனையில்
வண்டவாளங்கள் தெரியும்
பைத்தியக்காரனின் பசி
ஊரில் பிரசித்தம்
தனக்கும் புரியாது
உளரும் பேச்சுக்கு
வைக்கின்றான் பெயர்
கவிதை என்றே ..
மொழியின் வீதியில்
காமநாயின் கதைகள்
கொட்டிக் கிடக்குது
தொடத்தான் எவருமில்லை ..
அட..எனக்கும் வருது
கவிதை..கவிதை !

எழுதியவர் : ருத்ரன் (29-Feb-16, 7:02 pm)
சேர்த்தது : ருத்ரன் 85
பார்வை : 120

மேலே