சலாவு 55 கவிதைகள்

இரவாக வருவானோ ..
பௌர்ணமி நிலவாக வருவானோ ..

என்னவனே ..
ஏகாந்த கதைகள் என்னில் ..
ஏராளம் சொன்னவனே ..

கனவாக வருவானோ ..
பூந்தென்றல் காற்றாக வருவானோ ..

காதலனே ...
காதலில் வித்தைகள் பல ..
கற்றவனே ..

விழி மூடி நானுறங்க என்னுள் ..
வழி மாறி அவன் நுழைந்தான்..
பச்சை கிளியாக எனை மாற்றி ..
பல கதைகள் பேச வைத்தான் ..
படுத்துறங்கும் வேளையிலே ..
பகல் கனவு காண வைத்தான் ..

வேராக நான் இருந்து ...
காதல் நீராக நீ மாறி ..
மலர்களாக்கி மணந்திடவே ..
மன்மத தேர் ஏறி ..
நீ வாட என்னவனே ...
................
..................................சலா,

எழுதியவர் : (1-Mar-16, 12:10 am)
பார்வை : 63

மேலே