மதிய வெய்யில்
மதியவெய்யில்
"""''''""""""""""'"'""""""
ஒரு மதியவெய்யிலின்
சூடுகள் பாரபற்சம் இன்றி
எறித்தபோது பாதிக்கப்பட்ட தார்வீதிகள்
கொதித்து கண்ணீரில் கலங்கியிருக்கும்!
பாதங்களை இழுத்துப் பிடிக்க
திரணியற்று" ஒருசில பாதி சுவடுகளைஆறுதலுக்கு
பத்திரப்படுத்தியிருக்கும்!
சாயம்போன குடையில்
முதிய தலைகளின்
பிரசன்னங்களும், பள்ளிவிட்டுபோகும் பாவாடை தாவணிகளும்,
அனாதை தெருவை அழகுபடுத்தினாலும்
மிகுதியானவர்களை எல்லாம்
வீட்டுக்குள்ளே பூட்டிவைத்திருக்கும்!
வெய்யில் ,வெக்கை
மப்பு ,மந்தாரம் என
கோலம் மாறும்
மதிய வெய்யில்!
இழுத்துப் போட்ட சாய்த
நாற்காலி,
கைவிசிறி, பழையபாட்டு,
நொறுக்குதீனி, குட்டித்தூக்கம்,
இடையிடையே வந்து போகும்
கொழுசின் சினுங்கள் ,தூளியில்
ஊஞ்சல் ஆடும் பச்சைகுழந்தை,
கூடத்தில் அழுதுவழியும் நாடகதொடர் ,மின்விசிறியின்
பாட்டுக்கு தாளம்போடும் இன்றைய பத்திரிகை,
இந்த இனிய சுவார்சியங்களில்
மயங்கியிருக்கும் வெறுமையான மனசு!
பின்னேரபொழுது தொன்றை அன்பாக அடித்து இழுத்து
ஒரு குவளை தேனீருக்கு"""
ஏங்கி நிற்கின்றது!!!
லவன்
"""""""""