மாநகராட்சிப் பூங்கா

அழகிய சோலை
நடுவில் பழையதும் புதியதுமாய்
குப்பைகள் -
மாநகராட்சியின் பூங்காவில்
மனிதர்கள் - அவர்களில்

ஓய்வெடுக்கும் - சிலர்
போதையில் இடுப்பு வேட்டி
அவிழ்ந்து உருண்டபடி - சிலர்
குயில் பாட்டு எழுதும்
இயற்கையான கவிஞர்கள் - சிலர்
நிழலைப் பார்த்து பேசிக் கொண்டு
சுயநினைவில்லாமல் கூட - சிலர்

மரத்தடியில் பூச்சிகள்
கொஞ்சம் மண்புழுக்கள்
நீர் ஊற்றும் ஊழியர்கள்
விளையாடும் சிறுவர்கள்
உரசும் மூங்கில் கம்புகள்

அங்கங்களை கடைபோட்டு காட்டி
வக்கிரங்கள் வெளிப்படுத்தும்
மனப் பிறழ்வு ஆசாமிகள்
அவர்களோடு சில ஆமாம் சாமிகள்
பிரிந்து கிடக்கும் பிரியாணி பொட்டலங்கள்
பொது இடத்தில் அசுத்தம் செய்யும் புல்லர்கள்

எப்படிப் பேசினாலும் அழுகையை நிறுத்தாத
அடாவடி குழந்தைகள்..பலூன் விற்பவர்கள்-
பழ வியாபாரிகள் - வெட்டிப் பேச்சு வீராசாமிகள்
வளையாபதிகள் - மந்திகள் -இரைச்சல்கள் -
ஈனச் செயல்கள் - இவை எல்லாம் சேர்ந்து
..
பரப்பளவு அதிகமுள்ள
பறவைகளின் சரணாலயத்தை -
சோலையை - பூங்காவை
புகலிடம் ஆக்கி விட்டன
புதுப் புது அர்த்தங்களுக்கு !

எழுதியவர் : ருத்ரன் (1-Mar-16, 6:22 am)
சேர்த்தது : ருத்ரன் 85
பார்வை : 55

மேலே