காதல் செய்!
எண்ணங்களை ஏட்டில்
வண்ணங்களாக்கும் முயற்சி
கவிதை!
காதல் மட்டுமல்ல
காற்றின் லயம் கூட
கவிதைக்கு வரியாகலாம்!
நிலவின் நிறம் கூட
நெஞ்சத்தை சூறையாடலாம்!
கவிதை கற்பனையே!
காதலும் கூடத்தான்! - எனினும்,
கற்பனை நலமே!
நிசப்தம் மட்டுமே
நிரந்தரமாய் நீண்டிருக்கும்
வெறுமை வெளியில்
வண்ணத் தூரிகையால்
வானம் வரைந்தது
கற்பனையே!
வாழத் தெரிந்தவர்கள்
காற்றோடும் காதல் செய்பவர்கள்! - அதிலும்,
வாழ்த்தைப் பெற்றவர்கள்
கற்பனையை கவிதையாக்கியவர்கள்!