மறைகூடச் சொல்கிறதே
பிஞ்சுக் கால்களை
அன்புக் கரம்தாங்கி
ஆசையாய் முத்தமழை
அன்பு மகன் பாதத்தில்..!
பாதத்தை முத்தமிடும்
பத்தினித் தாயே..உன்
பாதத்தில் தானே
ஈடேற்றம் எனக்கு..!
ஈரைந்து மாதங்கள்
இடரோடு சுமந்து
ஈ எறும்பு தீண்டாமல்
இமையாகிக் காத்தவளே..!
உறக்கத்தில் கூட
இரக்கம் காட்டிடும்
உன் கருணைக்கு ஈடு
உலகத்தில் இல்லையம்மா..!
மறைகூடச் சொல்கிறதே
மாதா உன் புகழ் போற்றி
மனிதனோ அதை மறந்து
போகிறானே உனைத் தாழ்தி..!
அபு நசீர்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
