அம்மா
உலகத்தை இயக்கும் உன்னத ஓசை
அகிலத்தை அசைக்கும் அன்பின் பாஷை - அம்மா!
உன் அரவணைப்பின் முன் சொர்க்கமும் சிறியது..
துக்கங்களை சொல்லி அழும் நேரத்தில்
நீ என் தோழி..
சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் போது
நீ என் சகோதரி..
என் தவறுகளை பொறுக்கும் போது
நீ என் ஆசான்..
மொத்தத்தில் நீ எனக்கு இறைவன்
அனுப்பிய தேவதை..
உன் உயிருக்குள் ஓர் உயிராய் எனை சுமந்து
உன் புடவை நிழலில் என்னை வளர்த்து
உலகத்தை என்னவென்று உணர வைத்தாய்..
என் வாழ்க்கை வானத்தில்
நீ மறையாத சூரியன்..
என் ஆயுள் நாட்களில்
நீ உதிராத மலர்..
உன் கருவறையில் எட்டி உதித்த என்னை
பாசத்தில் கட்டி அணைத்தவள் நீ..
பார்வை இல்லாத கண்கள்;
வெளிச்சம் இல்லாத விளக்கு;
இறைவன் அறியாத கோயில்;
ஒளி இழந்த நிலா;
கலை அழிந்த ஓவியம்
இவை போல தான் - நீ இல்லாத என் வாழ்வும்..
நான் கேட்ட அனைத்தையும் தந்த நீ
கேட்காமலே கொடுத்தாய் - உன் அன்பை ..
உன் மகளாய் எனக்கு இந்த உலகில்
வேறு எதுவும் வேண்டாம் அன்னையே!
உன் தாய் அன்பை தவிர..