மனமே உண்மையை நேசி
மனமே உண்மையை நேசி
உன் வாழ்க்கை உயர்வாக வளம்பெறும்
பொய்யை நேசம் கொண்டால்
வாழ்வும் காயம் கொள்ளும்
பொய் அழகு போன்று தோன்றலாம்
அதுவே மகிழ்ச்சி என்றும் எண்ணம் வரலாம்
வாழ்வின் முடிவில் பொய் நெஞ்சில் நஞ்சாக யாசிக்கும்
உண்மை கசப்பாக இருக்கலாம்
அது துன்பம் என்ற எண்ணமும் தோன்றலாம்
வாழ்வின் முடிவில் உண்மையே
உன் நெஞ்சில் சந்தோசமாக யாசிக்கும்