சாரல்கள்
மாறி மாறி
நாட்டை சுரண்டுகிறது
தமிழ்நாட்டின்
மக்கள் ஆட்சி .....
தன்னை துளி துளியாய்
மாய்த்துக்கொள்கிறது
ஒவியத்திற்கும் ஓவியனுக்கும்
அழகு சேர்த்து தூரிகை ......
நாளும் தன்னை
புதுபித்துக்கொண்டு
நவீனம் எனும்
பெயரில் அழகு
இழக்கிறது இயற்க்கை .....
மண்ணோடு மண்ணாக இருந்தாலும்
இருக்கும் வரை தங்க வைக்கும்
குலமகளின் பெருமையை
வாசலில் கோலம் .....
இன்பத்தையும் ரசனையையும்
அதிகம் வெளிக்காட்டினாலும்
காற்றில் கரை
ஓதுங்குகிறது சாரல் .....