நடமாடும் நதிகள் - 27 வே புனிதா வேளாங்கண்ணி

நடமாடும் நதிகள் - 27

நினைவுப் பெட்டகத்தின்
பொக்கிஷம்
அனுபவம்.............1

வரைந்த கடலை
வரைபடத்தில் காணவில்லை
தேடுகிறது குழந்தை.....2

மரண வீடும்
அமைதியாகிறது
மழலையின் அழுகை....3

ரகசியம்
ரகசியமாகவே இருக்கிறது
தலையணைக்குள்.......4

சிறப்பாய் நடந்துமுடிந்தது
அன்னதானம்
வீதியெங்கும் குப்பை....5

அவன் கையெழுத்து
அழகாகியது
சுவரில் மட்டும்.........6

வான் மகளின்
நிலைக் கண்ணாடி
கடல்..................7

கொட்டிக் கிடக்கும்
மலர்கள் விற்பனைக்கல்ல‌
மயானம்...............8

வாழ்த்தும்
வசவும்
கோவில் வாசலில்.......9

அரிசி வாங்கியபடி
நியாயவிலைக் கடையில்
விவசாயி...............10


இத்தொடரில் எழுத வாய்ப்பளித்த தோழமை ஜின்னா அவர்களுக்கும்..
இத்தொடரை அழகாய் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் திரு முரளி அய்யா அவர்களுக்கும்...
முகப்பட பெயர் பொதித்த தோழமை ஆண்டன் பெனி அவர்களுக்கும்..
முகப்பட வடிவமைத்த திரு காளிதாஸ் அவர்களுக்கும்... நன்றி.. நன்றி...

வே. புனிதா வேளாங்கண்ணி..

எழுதியவர் : வே புனிதா வேளாங்கண்ணி (3-Mar-16, 6:45 am)
பார்வை : 391

மேலே