காகம் பறந்து விட்டது
காற்று வீசுகிறது
காற்றைக் கேளுங்கள்
மரத்திலிருந்து அடுத்து உதிரும் இலை
எதுவென்று !
காற்றுக்குத் தெரியுமா
மரத்திலிருந்து அடுத்து உதிரும் இலை
எதுவென்று !
காகம் பறந்து விட்டது
இலைகளில்லாத மரம் காற்றில்
அசைந்தாடுகிறது !
அந்திமாலை நேரம்
இலைகளில்லாத மரம் காற்றில்
அசைந்தாடுகிறது !
இலையுதிர் காலம்
இலைகளில்லாத மரம் காற்றில்
அசைந்தாடுகிறது !