அறிவியல் ஆரவாரம்

அறிவியல் வளர்ச்சி விண்ணை முட்டுதே
அழுகுரல்களும் எங்கும் கேட்குதே
அமைதியை பூமி தேடி நிற்குதே
அகிம்சையை நாடி சுற்றிச் சுழருதே


விண்ணைப் பிளக்கின்ற ஓடங்கள் வேண்டாம்
கண்ணைப் பறிக்கின்ற மின்னலும் வேண்டாம்
சுற்றியடிக்கின்ற ஆயுதம் வேண்டாம்
பற்றிப் படர்கின்ற பகைமையும் வேண்டாம்


முட்டி வலித்திட குத்தவும் வேண்டாம்
மூடி அடிக்கின்ற வன்மமும் வேண்டாம்
வெட்டி அழிக்கின்ற யுத்தமும் வேண்டாம்
கட்டி அழுகின்ற துன்பமும் வேண்டாம்


கற்ற விஞ்ஞானத்தால் கலவரம் வேண்டாம்
அறிவியல் வளர்ச்சியில் அழுகுரல் வேண்டாம்
பெற்ற விஞ்ஞானத்தால் புதுமைகள் செய்வோம்
உற்றவர் நாமென ஒன்றாய் இணைவோம்

எழுதியவர் : சர்மிலா (3-Mar-16, 3:29 pm)
Tanglish : ariviyal aaravaram
பார்வை : 189

மேலே