எனக்குள் இருவர்

எனக்குள் இருவர் .....
ஒருவர் ஆசான் ....
மற்றவர் கவிஞர் ......!!!

நிர்ணயிக்கப்பட்ட கல்வியை ....
வடிவமைக்கபட்ட பாடத்தை ....
பக்கங்கள் ஒன்றும் விடாமல் ....
பக்குவமாய் படித்து பட்டதாரியாகி .....
கற்பித்தலை தொழிலாக ...
எடுத்த ஆசான் ஒரு வடிவம் .....!!!

காண்பதெலாம் வாழ்க்கையாக்கி .....
காண்பதெல்லாம் காதல் கொண்டு ....
உண்மையோடு சில பொய்களை ....
உலகம் விரும்பும் வகையில் ....
உருவாக்கி கவிதை வடிவில் ....
கவி எழுதுவதை கடமையாக ....
கொண்ட கவிஞன் ஒரு வடிவம் ....!!!

சமூகத்தை துப்பபரவாக்கி ....
வாழ்வதற்கு மனத்தை வளமாக்கும் ...
ஆசானாக தொழிற்படுவதா ....?
மனதை துப்பரவு செய்து .....
வரிகளை வடிவங்களாக்கி ....
வாழ்கையை வசந்தமாக்கும் .....
கவிஞனாக்கும் கடமையை ....
செய்வதா ....?
எனக்குள் இருக்கும் இருவரின் ....
போராட்டம் இதுதான் ....!!!

உண்மையை மட்டும் படித்து ....
கற்பனையில் வாழும் ஆசான் ....!
உவமைகளை உண்மையாக்கி ....
பொய்யான உலக வாழ்க்கையை....
கோடிட்டு காட்டும் கவிஞன் ....!
உனக்கும் பிறருக்கும் முடிந்தவரை ....
உதவி செய்யும் மனிதனே ...
மனிதம் உடையவன் ...
ஆசானாக இருந்தாலும் சரி ....
கவிஞனாக இருந்தாலும் சரி ....
எனக்கும் இருப்பவன் ஒருவனே ....!!!

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (3-Mar-16, 7:44 pm)
Tanglish : enakkul iruvar
பார்வை : 96

மேலே