வேறு நிலாக்கள் 27 சேயோன் யாழ்வேந்தன்

என் ஆடைகளை அவிழ்க்க விருப்பமில்லை
என் ஒப்பனைகள் கலைவதை விரும்பவில்லை
என் சுமைகளை இறக்கிடச் சம்மதமில்லை
உண்மையின் ஆழத்தைக் காணும்
உத்தேசம் ஏதுமில்லை
உண்மை மாபெரும் கடல் போன்றதில்லை
அது ஒரு துளி நீர்தான்
என்றுனக்குப் புரியும்போது
நான் பருகிக்கொள்வேன்


-சேயோன் யாழ்வேந்தன்

எழுதியவர் : சேயோன் யாழ்வேந்தன் (3-Mar-16, 8:01 pm)
பார்வை : 113

மேலே