சில கவித் துளிகள்- 3

பச்சை பட்டுடுத்தியவள்
நாணத்தோடு தலை கவிழ்கிறாள்
- நெற்கதிர்

பசியால் வாடுகின்றனர்
புண்ணியம் என கொட்டுகின்றனர்
- அன்னாபிஷேகம்

கீழே இறங்குவதாக தெரியவில்லை
ஏறிக் கொண்டே போகின்றது
- விலைவாசி

கொட்டி கொட்டி தீர்த்தாலும்
துக்கம் இன்னும் தீரவில்லையோ
- அருவி

'சீதா'வை காணோம்
இராவணன் கையில் அகப்பட்டதோ
- ஆசையாய் நட்டது

எந்த அழகியைக் கண்டதோ
விசிலடித்து உற்சாகமாகின்றது
- கிச்சனில் குக்கர்

தன்னை தானே உருகுலைத்து
வெளிச்சம் தரும் ஒளிதீபம்
- மெழுகுவத்தி

துளிர்க்கும் முன்னே
பட்டுப் போகின்றது
- பெண் சிசு கொலை

பணக்காரர் சேமிக்கின்றனர் பணத்தை
ஏழையும் சேமிக்கின்றான்
- மழை நீரை

அரசு விடுமுறை
மாணவனுக்கு வருத்தம்
- அன்று ஞாயிறு என்பதால்

எழுதியவர் : நித்யஸ்ரீ (4-Mar-16, 2:22 am)
பார்வை : 192

மேலே