வைகறை- ஹைக்கூ வரிசைகள்

................................................................................................................................................................................................
படுக்கைக்குள்
காந்தம் பாய்ந்து விடுகிறதோ
விடிகாலையில்?
ம்..ம்..ம்.. அஷ்ட லட்சுமிகளும் போங்கப்பா...
வண்ணக் கனவுடன் வா,
நித்ரா தேவி..!
மூன்று தரம் எழுந்து
மும்முரமாய்ச் செயல்பட்டேன்..
கனவில்..
எழ முயலும்போது
இழுத்தணைக்கும் ஏதோ ஒரு உறவு..
போச்...
நெட்டி முறித்தேன்
வெளிப் போந்தது
முதுகில் சுருண்ட பாம்பு..
ஆதி மனிதன்
நிமிர்ந்து நிற்க சிரமம்தான் பட்டிருப்பான்..
அதிகாலைப் பொழுதில்...
விரல் விட்டு எண்ணும் உள்ளம்....
எத்தனை நாள் உள்ளன
ஞாயிற்றுக் கிழமைக்கு?
ஐந்து மணிக்கு
பதிமூன்று தரம் கூவும் கோழிக்கு
தேவை: கணக்கு வாத்தியார்..
அன்றாடப் பணிகள் தட்டும்..
கை கொடுத்து எழுப்பி விடும்..
அப்போதைய அவஸ்தை...
நதிகள் நீள்கின்றன-
எழுந்த மலை மீண்டும்
பீடபூமியாகிறது படுக்கையில்..
குளித்து,
உடல் துடைக்காமல் சுற்றும்
காலைக் காற்று..
பிய்த்துப் போட்ட
சாக்லேட் காகிதங்கள் பேசுகின்றன?
சிட்டுக் குருவிகள்..
துவக்கம் சரியாயிருக்க
பாண்ட்ஸ் பவுடர் எதற்கு?
தூக்கம் போதுமே?