வளர்ச்சியின் பரிணாமமே
சாய்ந்து நின்றேன் சாயங்கால வேளையில்
சரிந்து கண்டேன் கதிரவனின் மறைவை
நெருப்பு பிழம்பாக கிழே சறுக்கிறான்
மஞ்சள் ஒளி வெள்ளம் எங்கும் பரவ
மெய் மறந்து நிற்கிறேன் ஓரமாக
மறைவிலும் ஓர் ஒளி மயமான அற்புதம்
நினைவில் கொண்டேன் மறைவும்
ஒரு வகை வளர்ச்சியின் பரிணாமமே