தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து27---ப்ரியா

கீது வந்தனாவைப்பற்றி ரியாவுக்கு தகவல் கொடுத்தாள், உடனே கிளம்பி வா வந்ததும் போயிடலாம் வசந்த்கிட்ட ஏதாவது சொல்லி சமாளித்துவிட்டு வந்துவிடு என்று யோசனையும் கொடுத்தாள்.

என்ன பண்றது போகவா?வேண்டாமா?வசந்த் என்ன நினைப்பான் ஏற்கனவே நம்மளால அவன் அனைத்தையும் இழந்து ரொம்ப நொந்துபோயிருக்கான் இந்த சமயம் பார்த்து நாம் வந்தனாவைப்பார்க்க சென்றால் கண்டிப்பா வசந்த் கோவப்பட்டு என்ன வேணும்னாலும் செய்வான் அவன இன்னும் நோகடிக்கத்தயாராயில்லை வேண்டாம் என்று புத்தி சொல்ல மனதிற்குள் என்னவோ "ரியா போ போ" என்று உறுத்திக்கொண்டிருக்க அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.......

முன்னால் தோழிகள் மூவரும் சேர்ந்து இருக்கும் போது தங்களுக்குள் ஏதாவது முடிவெடுக்கும் போது அது சரிபடவில்லை என்றால் துண்டு குலுக்கி போட்டு அதில் வரும் பதிலை வைத்து செய்வதே இவர்களின் வேலை இப்பொழுது இதை செய்து பார்த்து என்ன வருதோ அது படி செய்யலாம் என முடிவெடுத்தாள்........!

இரண்டு பேப்பர் துண்டுகளை எடுத்து போகணும்,போகக்கூடாது என்று எழுதிகொண்டு அதை பக்கத்து வீட்டு அம்மாவிடம் எடுத்து சென்றாள்......

என்னம்மா ரியா! வா!வா!என்று உபசரித்தவளிடம் அம்மா இதிலிருந்து ஒரு துண்டுசீட்டை எடுங்கள் என்றாள்...? என்னம்மா வந்ததும் வராததுமா இப்டி சொல்றா உட்காரு என்ற அந்த அம்மா இவள் கையில் வைத்திருந்ததில் ஒருதுண்டு பேப்பரை எடுத்துக்கொடுத்தார் அந்த அம்மா,,,,,,,, மனது படபடக்க எடுத்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி காரணம் அதில் "போகணும்" என்பதே கிடைத்தது.

மனதிற்கு சரி எனப்பட சரிமா வாரேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் இவளது முகத்தில் ஏதோ குழப்பம் இருப்பதை புரிந்துகொண்ட அந்த அம்மா ஏதாவது பிரச்சனையாமா? என்று வினவினாள்...?

இல்லைமா எதுவும் இல்லை என்று சமாளித்துவிட்டு நகர்ந்தாள் ரியா...!

வீட்டிற்கு சென்றவள் வசந்த்க்கு ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு ஹேன்ட்பேக்கையும் செலவுக்கான பணத்தையும் மட்டும் வசந்தின் அறையிலிருந்து எடுத்துக்கொண்டு கிளம்பினாள்......!

போகும் போது மறுபடியும் வசந்த்க்கு சில தகவல்களை அனுப்பிவிட்டு கீதுவுக்கும் தகவல் கொடுத்துவிட்டு கிளம்பினாள்.

மீட்டிங் முடித்துவிட்டு அடுத்தநாள் கிளம்பலாம் என நினைத்தவன் மனதிற்கு என்னவோ ரியாவின் நினைவு வர உடனே வீட்டுக்கு கிளம்பிவிட்டான்.....

போகும் வழியில் மனதில்...........

ரியாமேல் எவ்வளவு கோவம் இருக்கிறதோ? அதே அளவு அன்பும் வைத்திருக்கிறேன் இருந்தும் ஏன் மறுபடியம் மறுபடியும் தவறு செய்கிறோம், தவறுதான் நடந்துவிட்டது பாவம் அவள் அறியாமல் நடந்த தவறுக்கு அவள் என்ன செய்வாள்,அவளும் நல்லவள்தானே தோழி பொய் சொல்லி இவள் மனதை கெடுத்திருக்கிறாள் பாவம் இவளுக்கு எது உண்மை பொய்யுன்னு தெரியாம தவறு செய்துவிட்டாள்?????

எந்த ஒரு பொண்ணாக இருந்தாலும் இந்த அளவுக்கு ஒரு தண்டனையை ஏற்றுக்கொள்ளமாட்டாள் ரியா நல்லவள் என்பதால்தான் அனைத்தையும் தாங்கிக்கொண்டாள் இதுவே வேறு ஒருத்தி என்றால் கண்காணாத இடத்திற்கு சென்றிருப்பாள் என் ரியா இனி எனக்கு நல்ல மனைவி.....அவளோட நல்ல படியா வாழ்ந்தா போதும் தொழில்,பணம் எதுவுமே தேவை இல்லை என்ற முடிவை எடுத்தான்.

தனது நெஞ்சில் ஒருமுறை கைவைத்துப்பார்த்தான் இதயம் "ரியா ரியா" என்று சொல்வதை உணர்ந்தான் அப்பொழுதுதான் செல்போன் ஸ்விட்ச் ஆப்ல இருந்தது நினைவுக்கு வர எடுத்து ஆன் செய்தான்........

ரியா அனுப்பிய 3தகவல்களும் வந்திருந்தன.........

1.என்னைத்தேடாதீங்க நான் ஒரு இடத்திற்கு செல்கிறேன் வந்து எல்லாம் சொல்கிறேன்.

2.என்னைமன்னித்து விடுங்கள் உங்களிடமிருந்து 2000ரூபாய் எடுத்து செல்கிறேன் அதையும் வந்த பிறகு சொல்கிறேன்.

3.சாப்பாடு ப்ரிட்ஜில் இருக்குது சாப்பிடுங்க நான் கிளம்புறேன்.

என்று அவள் அனுப்பிய தகவல்களை படித்தான் வசந்த் என்ன ஆச்சோ? ஏது ஆச்சோ? என்று பயந்து வேகமாய் வீட்டிற்கு வந்தான் வசந்த் அதற்குள் 12முறை கால்பண்ணியிருந்தான் அழைப்பை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை.....?...?

வேகமாக வீட்டிற்கு வந்தான் உண்மைலேயே ரியா வீட்டில் இல்லை கதவு பூட்டப்பட்டு இருந்ததைப்பார்த்ததும் கண்கள் கலங்கின செய்வதறியாமல் திகைத்துக்கொண்டிருந்தான் ,மறுபடியும் அவளுக்கு கால்பண்ணினான் இப்பொழுது செல்போன் ஒலி வீட்டிற்கு உள்ளே கேட்டது.....உடனே தன்னிடமிருந்த சாவியை எடுத்து திறந்து உள்ளே சென்று பார்த்தான் ஹாலில் சோபாவின்மேல் அவளது செல்போன் சிணுங்கிக்கொண்டிருந்தது....!

அதை எடுத்தவன் கீதுவின் நம்பரை எடுத்து பேசலாம் என நினைத்துப்பார்த்தான் ஆனால் அதில் யாருடைய நம்பரும் இல்லை "chellam" என்று இவனது நம்பரை மட்டும் ஸ்டோர் பண்ணிவைத்திருந்தாள்!

என்ன பண்ணுவதென்று தெரியாமல் அப்படியே அமர்ந்துவிட்டான் வசந்த்...........அப்பொழுது அந்த டேபிளில் இருந்த ரியாவின் டயரி இவனது கண்களில் பட்டது.....???
தொடரும்.....!!

எழுதியவர் : ப்ரியா (5-Mar-16, 10:30 am)
பார்வை : 483

மேலே