மறைக்கப்பட்ட உண்மை

வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்
இப்பதிவினை அனைவரும் ழுமையாக படிக்கவும்...
1930 ல் வெளிவந்த குடியரசு எனும் நூலில் இவ் உண்மை இடம் பெற்றுள்ளது

வள்ளல் வ உ சியை எத்தனையோ தலைவர்கள் எத்தனையோ கவிஞர்கள் பல விடுதலை வீரர்கள் பெரிதும் விரும்பி இருக்கிறார்கள்.

ஆனால் வள்ளல் வ உ சி யை மிக தீவிரமாகவும் வெறித்தனமாகவும் விரும்பியவர்கள் முத்துராமலிங்கதேவர் பெருந்தலைவர் காமராஜர் மாவீரன் மாடசாமி பிள்ளை மட்டுமே....

என் சிதம்பர சிங்கம் மாசற்ற தங்கம் என தலையில் தூக்கி வைச்சு கொண்டாடியவர் தேவர்....நேதாஜி சுபாஷ் சந்திரபோஸிடம் அடிக்கடி தேவர் சொல்லும் ஒரே வார்த்தை சிதம்பர சிங்கம்.....

அதே போல் வ உ சியை தன்னுடைய இதயத்தில் தனி இடம் கொடுத்தவர் பெருந்தலைவர் காமராஜர்....
வ உ சிக்காக ஒரு பாடலையே பாடியுள்ளார் காமராஜர். ஆனால் சில கெடுகெட்ட கயவர்கள் ? இப்பாடலை அழித்துவிட்டனர்... தன் வீட்டருகே ஒரு குழந்தையிடம் அடிக்கடி இப்பாடலை பாடுவாராம் காமராஜர்.
அப் பாடலை எல்லா நூல்களிலும் அழித்து விட்டனர்
ஆனால் 1931 ல் வெளிவந்த குடியரசு எனும் நூலில் இப்பாடலையும் தேவர் காமராஜர் வ உ சியின் நட்பை பெருமையாக சொல்லப்பட்டுருக்கிறது...
வ உ சியை காமராஜர் விரும்பியதற்கு காரணம்....? 1930 ல் காமராஜர் அவரை சார்ந்த நூறு பேர்கள் மீது? வெடிகுண்டு கொலை தேசத்துரோகம் சாதி தூண்டுதல் என வன்முறை சட்டம் பாய்ந்து அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அனைத்து ஆதாரங்களும் காமராஜருக்கு எதிராகவே இருந்தன.
பல வழக்கறிஞர்கள் இந்த வழக்கை எடுத்து நடத்தவே பயந்தனர்...

ஆனால் எவ்வித தயக்கமின்றி தாமாகவே இவ்வழக்கை எடுத்து மிக மிக திறமையாக வாதாடி காமராஜர் மற்றும் நூறுபேர்களை இவ்வழக்கில் இருந்து போராடி விடுவித்தார் அய்யா வ உ சி. வ உ சி நீதிமன்றத்தில் நுழைகிறார் என்றால்? நீதிமன்றமே அதிர்ந்த போன காலகட்டம்
அன்றைக்கு வ உ சி மட்டும் இல்லை என்றால்? இன்றைக்கு காமராஜர் என்பவர் இல்லை. இதை காமராஜரே தன் அம்மாவிடம் அடிக்கடி சொல்லுவாராம். இன்றைக்கு நெல்லையில் இருக்கும் வ உ சி மனிமண்டபம் காமராஜர் அவர்களால் அடிக்கல்நடப்பட்டதுதான்...

காமராஜர் பாடிய பாடல் இதுதான்....

*கப்பல் ஓட்டிய தமிழன் யாரு?
கண்மணி கூறு.
இப்புவியில் வெள்ளையரை
எதிர்த்த கப்பலு
இந்தியாவில் ஒருவர்தானே
என்பது பேரு.
சிங்கம் அவர் தென் தமிழன்
சிதம்பரனாரு.

வ.உ.சி. என்றாலே வள்ளல்
என்பாரே.
வரலாறு அறிந்தாலே வீரன்
என்பாரே.
பிள்ளை என்று சொன்னாலே
உள்ளம் பதறுவார்.
வெள்ளை அவன் இவராலே
வியர்த்துக் கொட்டுவான்.

பக்க ஊரு பதிந்த வீரம்
பாஞ்சாலங்குறிச்சி
திக்கெல்லாம் திகில் பரவும்
தில்லென உதிச்சு.
கட்டபொம்மன் விட்ட இடம்
தொட்ட வீரரு
ஓட்டப்பிடாரம் உலக நாதர்
பெற்ற பிள்ளையிவரு.

செக்கிழுத்த செம்மல் இவர்
சொத்திழந்தாரு.
சுதந்திரந்தான் சொத்து என
சுகமிழந்தாரு.
வக்கீலாக வாழ்ந்த இவரு
கல்லுடைச்சாரு
வாழும் நாட்டின் உரிமைக்காக
வறுமைப் பட்டாரு.

பட்டம் பதவி எல்லாத்தையும்
பறிகொடுத்தாரு.
மிச்சம் என்ன உயிர் அதையும்
துச்சம் என்றாரு.
முத்தமிட்டே பாரதத்தை
முன் மொழிந்தாரு.
கட்டாயம் விடியும் என்றே
கண் அயர்ந்தாரு

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (4-Mar-16, 10:57 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 390

மேலே