இந்தியனாக உங்கள் உணர்வு என்ன உண்மையில்

மதுரையில் நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது திங்கள்கிழமை மனுநாளில் மனு வாங்கி முடித்துவிட்டு வெளியில் வந்தேன்.

கைலி, அழுக்கு சடையோடு 45 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் என் எதிரே வந்தார். 'ஏன் முன்னாடியே வரக் கூடாதா? கிளம்பும்போது வருகிறீர்களே... நீங்கள் யார்?’ என்று அவரிடம் கேட்டேன்.'அய்யா... நான்
வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பேரன். நானும் என் தம்பியும் கட்டடங்களுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்துவருகிறோம் .

சமீபத்தில் ஒரு உயரமான கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்கும்போது என் தம்பி தவறி விழுந்துவிட்டான ்.
இப்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறான்.
அவனுக்காக உதவி கேட்டு இங்கே வந்தேன். வெளியில் இருக்கும் காவலாளி என்னை உள்ளே விடாமல் துரத்தி அடித்தார். அவரை சமாளித்துவிட்டு வர இவ்வளவு நேரம் ஆகிவிட்டது’ என்று பரிதாபமாகச் சொன்னார்.

நான் அதிர்ந்துபோனேன்.'உனக்கு இங்கே நிற்கும்
உரிமையை வாங்கிக் கொடுத்ததே என் பாட்டன்தானடா என்று முகத்தில் அடித்ததுபோல சொல்ல வேண்டியதுதானே?’ என்று சொல்லி அவரை ஆசுவாசப்படுத்தினேன்.

அதன் பிறகு அவருக்கு 50 ஆயிரம் பணம் கடன் ஏற்பாடு செய்து கொடுத்து உழவர் உணவகம் தொடங்கச் செய்தேன். வ.உ.சி-யின் குடும்பமே வக்கீல் குடும்பம்.
வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசி கப்பல்விட்ட கம்பீரமான வ.உ.சி-க்கு ஆங்கிலேய அரசு இரட்டை ஆயுள்தண்டனை விதித்தது. உடம்பு முழுவதும்
சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரைச்
செக்கிழுக்கச் சொல்லி உத்தரவிட்டது.
தேசத்துக்காக செக்கிழுத்தவரின ் பேரன்கள்
பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
சம்பந்தமே இல்லாத யார் யாரோ பலனை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

- சகாயம் ஐ.ஏ.எஸ்.—

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (4-Mar-16, 8:50 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 152

மேலே