THE REVENANT - பனியில் ஒரு சாகசம்

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுத்துள்ள திரைப்படம்... மேலும், நீண்ட வருடமாக ஆஸ்காருக்கு பரிந்துரைப்பட்ட Leonardo Di Caprio விற்கு ஆஸ்கர் கிடைத்த படம். என்றெல்லாம் Internet ல் படித்த பின்னர், சரி.. பார்ப்போம் என்று இன்று THE REVEREND என்ற அமெரிக்க திரைப்படம் பார்த்தேன்.

பெரிய கதை ஒன்றும் இல்லை... உயிர் பிழைத்தலும் பழி வாங்களும்தான் கதைக்கரு. ஆனால் பிரமாதமாக எடுத்திருக்கிறார்கள். மிக மிக அருமையான location ன்கள். படம் முழுதும் பனி... பனி... பனி...

பத்தம்போதாம் நூற்றாண்டில் பணியில் வாழும் விளங்குளை வேட்டையாடி கொன்று அதன் அடர்ந்த தோல்களை எடுக்க செல்லும் ஒரு வேட்டைக்குழுவினருள், காட்டில் தனியாக, ஒரு பெரிய பனிக் கரடியுடன் சிக்கிக்கொள்ளும் Di Caprio மீண்டும் உயிர் பிழைத்து... அங்குள்ள பழங் குடியினரிடமிருந்தும் தப்பித்து… வில்லனையும் எப்படி பழி தீர்க்கிறான் என்பதுதான் THE REVERENDன் கதை.

இதில், ஒரு காட்சியை நான் சொல்லியே ஆகவேண்டும்... அது பனிக் கரடி Di Caprio வை தாக்கும் காட்சி. இது வரை இப்படி ஒரு காட்சியை நான் எந்த படத்திலும் பார்த்ததில்லை. மிக மிக தத்ரூபமாக எடுத்திருக்கிறார்கள். நேரில் பார்ப்பதைப்போல் இருந்தது. மேலும், ஒருவன், ஒரு குதிரையை சுட்டவுடன் அது சட்டேன கீழே விழும் காட்சி மற்றும் குதிரையுடன் Di Caprio மலை உச்சியில் இருந்து விழும் காட்சி போன்றவைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மற்ற காட்சிகள் கூட பல படங்களில் பார்த்தவைகள்தான்.... Di Caprio வும் பொருத்தமாக நடித்திருக்கிறார்.

நல்ல சினிமாவில் ஆர்வம் உள்ளவர்கள் தவிற்கவே கூடாத சாகச திரைப்படம் THE REVEREND.
_______________________________________________
5th March 2016
ManivannanGallery.BlogSpot.Com

எழுதியவர் : க.மணிவண்ணன் (6-Mar-16, 11:16 am)
சேர்த்தது : கமணிவண்ணன்
பார்வை : 89

மேலே