விரக்தி

துக்கம் பக்கம் வந்து ஆட்டுகிறது
துடைத்திட கைகளில்லை...

வாழ்வு சொல்லும் பாடங்களில்
படித்த பக்கங்கள் எல்லாமே இருள்...

சிறு புன்னகை உதடு தொட்டாலும்
கண்களிலிருந்தும் தூரமாகவே...

மனக் கணக்குகளில் மட்டும் வந்து
மடிந்து போகின்றன எனக்கான இன்பங்கள்...

விடலை பருவம் கடந்தும்
விடிவு வரக் காணா வாழ்க்கை...

கனவுகள் கனவாகவே கருகுகின்றன
ஆசைகள் கண்ணீராக வழிந்தே அடங்குகின்றன...

சோகங்களுக்குள் மூழ்கிடாமல் காப்பது - தினம்
காத்திருக்கும் பொறுப்புக்களும் கடமைகளுமே..

எனக்கென இறைவன் எழுதிவிட்ட வாழ்வின்
அர்த்தம் தேடி அலைகிறேன் அங்குமிங்கும்..!

உடைந்து விழுந்து கிடக்கையில்
விமர்சிக்க என்று வருபவர்கள் பலர்...

ஒருவர் கைகொடுத்தாலே போதும்
நம்பிக்கை சிறகுகள் மீண்டெழுந்திட...

ஒற்றை உலகம் பரந்து கிடந்தென்ன இலாபம்,
ஒட்டு மொத்த மனித உள்ளங்கள் ஒடுங்கி கிடக்கையில்..!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (6-Mar-16, 1:12 pm)
Tanglish : virakthi
பார்வை : 1981

மேலே