நலந் தரு வீணை யே

நலந் தரு வீணை யே..!

அச்சு வெல்ல அழகே யுனது
கச்ச ணிந்த மென் யெழிலே..!
மெச்சி யெழும் முகத்தே யிதழ்
எச்சி லமுதூட்டிய தேம்மாதே.

மாதே! மருக்கொ ழுந்து வாச
மாமலர் போதே! மணங் கமழ்
மாதென சுகந்தரு தேன் பாகே!
மானே மதுர நடைப் பேழையே.

பேழை யிட்டத் தவநிதி யாய்
ஏழைப் பெற்ற பெருஞ் சோறே
வாழை ஒத்தப் பருவ நதிதேக
யாழை இசைப் பதுயிர் தேவை.

தேவை நிதமுன் னுறவு தரும்
சேவை யதனில் வருமி னியப்
போதை யென மைய லழகுக்
கோதை மணக் கூந்தலே புகல்.

புகலி டம்தரும் தருவே! புலர்
அகல் விழிப் புனல் பிழம்பே.!
பகல்தண்னெழில் நிலவுப் பால்
நகலென நலந்தரு வீணை யே.

எழுதியவர் : இராக. உதயசூரியன். (6-Mar-16, 3:26 pm)
பார்வை : 116

மேலே