தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல் - 26
கொட்டாம்பட்டி சின்னசிட்டு
ரெக்கைகட்டி சென்னைக்கு வந்தா(ள்)
கோடம்பாக்க வாசலிலே – சினிமா
சான்ஸ் கேட்டு அலுத்துப்புட்டா..!”
சான்ஸேதும் கிடைக்கல;
வேற பொழப்பேதும் தெரியல,
இனி விபச்சாரம் ஒன்றுதான்
தனக்கு சம்சாரம் என்கிறா(ள்)
எந்த தொழிலை நம்பினாளோ
அந்த தொழில் கைகொடுக்கல
இந்த தொழிலில் இறங்கியதும்
ரெகுளர் கஷ்ட்டமர்கள் ஃகீயூவுல
ஆண்டி முதல் அரசன் வரை
அவ காலுக்கு அடியில..
தமிழ் நாட்டின் கஜானா பெட்டி
பாதி இப்போ அவ மடியில
போலீஸ் வருகிறது
புலன்விசாரனை செய்கிறது
போலி புகாருன்னு
கேஸ குளோஸ் செய்கிறது
கட்சிகள் வருகிறது
தேர்தல் நிதி கேட்கிறது
எந்த கட்சி ஆண்டாளும்
அதிலவள் செல்வாக்கு உயருகிறது
தன் சொந்த ஸ்டோரிய வச்சே
அந்தரங்க சுந்தரின்னு’ சினிமா எடுத்தா
அதில் கதாநாயகியாவும் நடிச்சா
அந்த படம் இப்போ வசூலில்
சாதனை புரியுது, ‘அவதார்’-க்கு இணையா..!
எந்த கனவோடு சென்னை வந்தாளோ
அந்த கனவு நிறைவேறியது
அவ சொந்தச் செலவாலே..!
வந்த வேலை முடிந்ததாலே - அவ
சொந்த ஊருக்கே திரும்பினாளே
திருமணம் ஆகாத திருமகளாய் !
அவதான் இப்போ ஊரூக்கே
படியளக்கும் பெருமகளாம்..!