பெண்ணால் முடியும்
நேற்றைக்கு மண்ணில் புதைக்கப்பட்டேன்...
பாரதி சொன்னார் விதைக்கப்பட்டாய் என...
நயமிகு நல்லோர்தம் கல்விநீரினில்
புனிதமுற்றேன்... உயிரும் பெற்றேன்...
கல்வி மறுக்கப்பட்ட தேசமதனில்
மலாலாவாய் மலர்ந்தேன்....
உரிமை மறுக்கப்படவே - உண்ணாத
ஷர்மிளாவாய் எழுந்தேன்...
அறிவுது நிறுவிடவே பார்புகழ
சகுந்தலவாய் சிரித்தேன்...
மாநிலம் செழிப்புற ஆண்டிடவே
நற்தகுதியும் பெற்றேன்....
இந்திரா காந்தியாகி இந்தியா ஆண்டேன்...
கல்பனா சாவ்லாவாகி விண்ணையும் ஆண்டேன்...
மண்ணில் புதைந்தாலும் விண்ணை ஆள
என்னால் முடியும் பெண்ணால் முடியும்...