பெத்தவள பெத்தவ - காதலாரா
பெத்தவள பெத்தவ
~~~~~~~~~~~~~~~~
ஒருத்தனும் எட்டிப் பாக்காத
குடுசக்குள்ள ...ஒண்டியா
ஒடம்ப போத்திட்டு சாவனும்...
தடத்துலப் போற
ஒரு ஜனத்தையும் தெரியல...
வாசல்ல கெடக்கும்
ஒரலு கெரலு ஒன்னும் தெரியல...
அந்த அம்மி கல்லுல
அடிக்கடி தடிக்கி உழுந்து
அங்கங்க புண்ணா கெடக்கு...
ஒரு வா கஞ்சிக்கு
அவ வூட்டுக்கும்...இவ வூட்டுக்கும்
பட்னியா அலையனும்...
ஊன்றதுக்கு கோல மறந்தா
ஒத்த அடி நகர முடியல...
வாரத்துக்கு ஒரு வாட்டி
எம்புள்ள...உங்கம்மா வந்து தான்
தண்ணி காயவச்சி ஊத்துவா...
வந்தவெல்லாம் சொத்துக்கு
வந்த மாறி ....சோத்தப் போடவே
சண்டப் போட்டு சாகுறாளுக..
கரையான் திண்ண கட்லு
ஒடஞ்சி உழந்தா ...
உதவாத உசுரு
ஒரேடியாய் போய்டும்...
அந்த மனுஷன்
ஊரு வுட்டு ஊரு போயி
அனாத பொணமா வந்தப்ப
நானும் செத்துருந்தா
எவனுக்கும் கஷ்டமில்ல....
ஒரு முழ கயித்துல
தொங்கி தொலைய
ஒடஞ்ச கைய வச்சிட்டு
ஒன்னும் பண்ண முடியல...
நாளைக்கி ராத்திரி
நானே போறேன்
நடு ரோட்டுக்கு...
பெத்தது கொன்னு
பொணமா போறத விட..
லாரில உழுந்து
நசுங்கி சாவலாம்....
- காதலாரா..