ஒடஞ்ச கண்ணாடி ~ சகா

ஒடஞ்ச கண்ணாடி
பல மடங்காய்
என்னுள் நீ...!!!

சிதறிய கண்ணாடி
நினைவில் தெரியும்
கல்லூரி நாட்கள்...!!!

சிகப்பு வெளிச்சம்
சில்லறை வியாபாரிகள்
சிக்னலில்...!!!

ஓட்டை பலூன்
மூச்சை நிறுத்திய
முதல் காதல்...!!!

அஞ்சல் தலை
முகவரி தேடும்
முக்கிய தலைவர்கள்...!!!

எலும்பும் தோலுமாய்
கறிக்கடை முன்
நன்றியுடன் வாலாட்டி...!!!

எழுதியவர் : சகா (சலீம் கான்) (6-Mar-16, 8:49 pm)
பார்வை : 92

மேலே