அரசாங்கம்

ஒரு கழைக்கூத்தாடி தன் பரிவாரங்களுடன் ஒரு கழுதை, குரங்கு, நாய் இவற்றுடன் பக்கத்து ஊருக்குப் புறப்பட்டான். அது புனித ரம்ஜான் இரவு. ஒரு மண்டபத்தில் தங்கினர். ஒரு இரவு வானத்தில் ஒளி மண்டலம்.

இந்த நேரத்தில் ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டால் வேண்டியது நடக்கும் என்பது நம்பிக்கை. நாய், குரங்கு, கழுதை மூன்றும் தங்கள் கோரிக்கையை வேண்டிக்கொண்டபின் எஜமானனை எழுப்பின.

எஜமானன் நீங்கள் என்ன வேண்டிக்கொண்டீர்கள்? நீங்கள் கேட்டதையே நானும் கேட்டுவிடக்கூடாதே! என்று மூன்றிடமும் கேட்டான்.

என்னை பேரரசர் ஆக்கிவிடும்படி கேட்டேன் என்றது கழுதை!

நான் தலைச்சிறந்த மதகுருவாக மாறவேண்டும் என்று கேட்டேன் என்றது குரங்கு.

நான் இந்நாட்டின் தலைமை அமைச்சராக வேண்டும் என்று கோரியுள்ளேன் என்றது நாய்.

மூன்றின் கோரிக்கைகளையும் கேட்ட கழைக்கூத்தாடி வேண்டிக்கொண்டான்.

ஆண்டவனே! என்னைக் குருடனாக்கிவிடு! இவர்கள் கோலொச்சும் அரசாங்கத்தை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது!
-
ஒருநிமிடக் கதைகள் என்ற நூலில் படித்தது.

எழுதியவர் : செல்வமணி (6-Mar-16, 11:56 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : arasaangam
பார்வை : 137

மேலே