பட்ஸ்

‘நீங்க போங்க நான் காரை பார்க் பண்ணிட்டு வரேன்’ என்று அபிலாஷ் சொன்னான். மனைவி காயத்ரியும், மகன் ஹரிஷும் லூனா என்ற பெரிய ரெஸ்ட்னேண்டிற்குள் நுழைந்தனர். மாலை சற்று இருட்டி இருந்தது.

அபிலாஷ் காரை பார்க் செய்துவிட்டு ரெஸ்ட்னேண்டிற்குள் சென்று நேராக, ஏற்கனவே புக் செய்து வைத்திருந்த டேபில் நாட்காலியில் அமர்ந்தான். காயத்ரி மெனு கார்டை பார்த்துக்கொண்டிருந்தாள். ஹரிஷ் இன்னொரு மெனு கார்டில், ஐஸ் கிரீம் பட்டியலை பார்த்துக் கொண்டிருந்தான். அபிலாஷும் கையில் ஒரு மெனு கார்டை எடுத்து எடுத்துக்கொண்டான்.

வித்யாசமான பெயர்களின் பட்டியல் மெனு கார்டில் நிறைந்திருந்தது. நீண்ட யோசைக்கு பிறகு, என்ன சாப்பிடலாம் என்று மூவரும் ஒரு மூடிவுக்கு வந்தனர். இவர்களிடம் வந்த வெயிட்டரிடம் அபிலாஷ் ‘ஒரு Mexican green wave Pizza , இரண்டு Fruit bread and cheese sandwich, அப்பறம் ஐஸ் கிரீம்ல Chocolate Chip Cookie Dough, Dark Chocolate Raspberry, Strawberry Ice Cream, அதுக்கு முன்னாடி மூணு வெஜிடபுள் சூப்’ என்று ஆங்கிலத்தில் சொல்லி முடித்தான். வெயிட்டர், அபிலாஷ் சொன்னதை எல்லாம் குறிப்பெடுத்துக்கொண்டு. ‘தேங்க் யூ சர்’ என்று சொல்லி அங்கிருந்து சென்றான்.

மேல் தட்டு மக்கள் வரும் ரெஸ்டாரெண்ட் அது. ஒரு மேற்கத்திய மெலடி இசை மென்மையாக ஓடிக்கொண்டிருந்தது. ரெஸ்டாரெண்ட் முழுக்க மங்கிய வெளிச்சமே நிறைந்திருந்தது. ஒரு சில வெளிநாட்டவரும் அமர்ந்திருந்தனர்.

கையில் வைத்திருந்த அதி நவீன வீடியோ கேம்ஸில் விளையாடிக்கொண்டிருந்த ஹரிஷ் ‘மம்மி எனக்கு ஒரு கியர் சைக்கிள் வேணும்’ என்று காயத்ரியிடம், சிணுங்கிய படி கேட்டான். காயத்ரி ஏதோ சொல்ல வாயெடுத்த போது, மொபிளை பார்த்துக்கொண்டிருந்த அபிலாஷ் ‘லாஸ்ட் மன்த் வாங்கின கியர் சைக்கிள் என்னாச்சி’ என்றான். ‘டாடி அதுல பைவ் (Five) கியர்தான் இருக்குது, ஓல்ட் மாடல். இப்போ புது மாடல் வந்திருக்கு, என் கிளாஸ் மெட் மிதுன் வாங்கிட்டான். அது ஸுபேர்ப்பா(Superb) இருக்குதாம் டாடி, ப்ளீஸ் டாடி வாங்கிக்கொண்டுங்க!’ என்றான்.

‘நோ வே, உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து உங்க அம்மா கெடுத்து வெச்சிருக்கா!’

காயத்ரி மொபைலில் சாட்டிகிங்கில் இருந்தபடியே
‘உங்க ரெண்டு பேர் சண்டையில என்ன ஏ இழுக்கற அபிலாஷ், என்ன இழுக்கலானா உனக்கு தூக்கமே வராதே!’

‘உன்னே மாதிரியே அவனையும் வளத்து வெச்சிருக்கியே! பாரு அதே பிடிவாதம்!’
‘நீங்களும் தானே அவன வளத்தீங்க... உங்கலாமாதிரிதானே அவனும் இருப்பான்! பாரு அதே பிடிவாதம்!’

அவளுக்கு பதில் சொல்ல வாயெடுத்தான் அபிலாஷ் அதற்குள் வெயிட்டர் வந்து எல்லா உணவு பொருட்களையும் கொண்டுவந்து டேபிள் மேல் வைத்தான்.

அவரவர் உணவுகளை சாப்பிடத்துடங்கினர். சொற்கள் கொஞ்சம் ஓய்வெடுத்தது. மணி ஏழு முப்பதானது. உணவும், ஐஸ் கிறீமும் சாப்பிட்டு முடிந்தது. வெயிட்டர் பில் கொண்டு வந்து கொடுத்தான். பில்லில் 2,330 ரூபாய் என்று இருந்தது. அபிலாஷ், 2,500 ரூபாய் பில் அட்டையில் வைத்து மூடி ‘கீப் தெ சேஞ்ச்’ என்றான். வெயிட்டர் ‘தேங்க் யு சர்’ என்றான் சிறு புன்னகையுடன்.

‘டாடி ஃபைவ் கியர் பைக் வேணும்....!’ விடுவதாக இல்லை ஹரிஷ்.
‘எப்படியோ போ...! வாங்கித்தறேன்....!’
ஐ லவ் யு டாடி...!
இதுல ஒன்னும் கோரச்சல் இல்ல...!

காயத்ரி எதுவும் பேசாமல் புன்னகைத்தாள். மூவரும் எழுந்து ரெஸ்டாரெண்டை விட்டு வெளியே வந்தார்கள்.

ஹரிஷை விட சிறு வயதுடைய ஒரு சிறுவன் எங்கிரிந்தோ திடீரென அபிலாஷ் முன் வந்து
‘சார் ஒரே ஒரு பட்ஸ் வாங்கிக்கொங்க சார்... வேபாரமே ஆகல சார்... பசிக்கிது சார்... ஒண்ணே ஒண்ணு வாங்கிக்கொங்க சார்...’ என்றான்.

_________________________________________________________________________
ManivannanGallery.BlogSpot.Com

எழுதியவர் : க.மணிவண்ணன் (5-Mar-16, 2:35 pm)
சேர்த்தது : கமணிவண்ணன்
பார்வை : 280

மேலே