பாரதியின் பரிமாணங்கள் ----கயல் பருகிய கடல்

கயல் பருகிய கடல்’ என்னும் இந்நூல், மாலன் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு. பாரதியை ஒரு கவிஞனாக அறிந்திருக்கும் இன்றைய தலைமுறைக்கு, அவரது பன்முகப் பரிமாணங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியாக இந்நூலை எழுதியிருப்பதாகச் சொல்கிறார் ஆசிரியர். ‘பாரதியும் பாரதமும்’, ‘பாரதியும் இஸ்லாமும்’, ‘பாரதியின் மரணம் எழுப்பும் கேள்விகள்’ என இந்நூலின் பெரும்பாலான கட்டுரைகள் பாரதிமயமாகவே இருக்கின்றன. அத்துடன், தமிழின் சிறுகதை வரலாற்றில் பாரதிக்கு உரிய அங்கீகாரம் மறுக்கப்பட்டு, வ.வே.சு. அய்யர் கொண்டாடப்படுவதின் பின்னால் இருக்கும் அரசியலையும் இந்நூல் அலசுகிறது.

உ.வே.சா. கி.ராஜநாரயணன், புதுமைப்பித்தன் போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களும் இந்நூலில் காணப்படுகின்றன. எழுத்தாளர் ஜெயமோகனோடு வலைப்பூவில் மாலன் நடத்திய ஓர் உரையாடலும் நூலில் இடம்பெற்றிருக்கிறது.



கயல் பருகிய கடல்
மாலன்
பக்கம்: 208; விலை - ரூ. 130
கவிதா பப்ளிகேஷன், சென்னை - 600 017.
தொடர்புக்கு - 2436 4243.

தொகுப்பு---மைதிலி

எழுதியவர் : (7-Mar-16, 6:55 am)
பார்வை : 219

சிறந்த கட்டுரைகள்

மேலே