இந்தியனே எழுந்திரு ----வளர்ந்த பாரதத்தில் வாழ்வோம், அப்துல் கலாம் புத்தகம், கலாம் எழுத்து, விமூர்த்தானந்தர், புத்தக அறிமுகம்
மக்கள் மனதில் வாழ்ந்துவரும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ராமகிருஷ்ண திருமடங்களில் ஆற்றிய உரைகள், அவரது சிறப்பான நேர்காணல்கள், அவரைப் பற்றி வெளிவந்த சிறந்த கட்டுரைகள் ஆகியவற்றின் அழகான தொகுப்பு இந்நூல்.
இந்தியனே எழுந்திரு! நீ நீயாக இரு என்பன போன்ற 29 கட்டுரைகளும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் எண்ணத்துடன் தொகுக்கப்பட்டுள்ளன.
டாக்டர் அப்துல் கலாமின் சகோதரரின் வாழ்த்துச் செய்தி, ‘கலைமகள்’ ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியனின் வாழ்த்துரை, மேகாலயா மாநில ஆளுநர் சண்முகநாதனின் அணிந்துரை ஆகியன
இந்நூலுக்கு அணிசேர்க்கின்றன.
ஒன்பது நாடுகளில் பயணித்து மண்ணை வளப் படுத்தி மக்கள் வாழ்வைச் செழுமையாக்கும் நைல் நதியைப் பற்றிய அப்துல் கலாமின் கவிதை, சூடான் நாட்டின் மக்களவையில் அரபு மொழியில் இசைக் கப்பட்டு பாராட்டப்பெற்ற இனிய நிகழ்வு போன்ற சுவையான சம்பவங்கள் இந்நூலில் நிறைந்துள்ளன.
கனிம வளமும் கடற்கரையும் அரிய உயிரினங்களும் தாவரங்களும் மனித வளமும் நிறைந்த இந்தியா, ஏழை நாடல்ல என்று மாணவர்களின் வினாவிற்கு விடையளித்துத் தன்னம்பிக்கை ஊட்டும் அப்துல் கலாமின் சிந்தனைகளை எளிய தமிழில் அழகிய நடையில் தொகுத்து வழங்கியுள்ளார் ‘ராமகிருஷ்ண விஜயம்’ இதழாசிரியரான சுவாமி விமூர்த்தானந்தர்.
வளர்ந்த பாரதத்தில் வாழ்வோம்
டாக்டர் அப்துல் கலாம்
தொகுப்பாசிரியர்: சுவாமி விமூர்த்தானந்தர்
பக்கம்: 222; விலை ரு: 100
வெளியீடு: ராமகிருஷ்ண மடம், சென்னை 4
தொடர்புக்கு: 044 24621110
தொகுப்பு;எல்.எஸ்.சத்தியமூர்த்தி