ரீ ஸ்டார்ட் இல்லை -சுஜய் ரகு

விளை பயிர்களை
முத்தமிட்டபடியே கடக்கிறது
பறவையின் இறகு

எங்கெங்கிலும் பசுமை
வவ்வால்களின் தலைகீழ் தவத்தில்
சிணுங்கி விடிகிறது பொழுது

பாறைகள்தான்
விதைகளுக்கென யாசகக் கைகள்
நீட்டுகின்றன

ஒரு மூதாட்டியின் மரணத்தை
வரமாகிவிடாத ஒரு வார்த்தை
நிர்ணயிக்கிறது

மரங்களில் ஒன்றாக
பெயர் எழுதியக் காதலர்கள்
மணந்து பிரிகிறார்கள்

உன் வற்புறுத்தலில்
ஸ்மாட் போன் வாங்கியபிறகு
தனிமையை உடைத்தெரிகிறேன்
நீயின்றியும்

மழை ஏக்கத்தில் நெற்றி சுருக்கி
வானம் நோக்கிய பெரியவருக்கு
இப்போதைக்கு ஒரு
கைத்தடி அவசியம்

பொத்தான்களைத் தட்டும்
இந்தத் தருணத்தில்
என் கண்மணியே முன்னாள்
காதலியே

உன் விட்டேத்திக் கண்கள்
என்னுள் ஊடுருவாதிருக்கட்டும்

ரீ ஸ்டார்ட் மொபைளுக்குண்டு
வாழ்க்கைக்கில்லை !!

எழுதியவர் : சுஜய் ரகு (7-Mar-16, 8:59 am)
பார்வை : 198

மேலே