கசப்பான அனுபவங்கள்
அன்பு செய்யத்
தெரிந்த மனதிற்கு
அவமதிக்கத் தெரியாது
திறமையைத்
தட்டிக்கொடுக்கும்
குருவுக்கு
பார பட்சம் தெரியாது
பரிவு காட்டத்
தெரிந்த இதயத்திற்கு
புறக்கணிக்கத் தெரியாது.
வார்த்தைகளைக்
கூராக்கி
அவமதிப்புக்களை
ஆயதங்களாக
வைத்துக் கொண்டவர்களின்
பாரபட்சங்களோ
புறக்கணிப்போ
பாதிப்பதில்லை
எந்த ஒரு
திறமை சாலியையும்
ஏனெனில் அவன்
வானம் எல்லையற்றது..
அவன் எங்கும்
பிழைத்துக் கொள்வான்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
