துருவ சித்தாந்தம்- ஒரு பக்க கதை - கவிஜி

"ஏன் பிடிக்கல... இந்த மாப்ள பிடிக்கலயா.. இல்ல .. கல்யாணமே பிடிக்கலையா..."

வீட்டில் இருந்த அனைவரும் கேட்ட பின்னும்.. அமைதியாக வெறித்து அமர்ந்திருந்தாள் அன்னபூரணி....

அன்றிரவு ... விசும்பிக் கொண்டே தன் அம்மாவிடம்....கல்லூரியில் படிக்கும் போது.. அர்ஜுன் என்ற பையனைக் காதலித்ததாகவும்... அவன் ஒரு விபத்தில் இறந்து விட்டதாகவும்... கூறி கதறினாள்..... வீடே விழித்துக் கொண்டது.....

"சரி.. இறந்தவன் வரப் போவது இல்லை... மனதை மாற்றிக் கொள்..."

"மனசு தான சீக்கிரம் மாறிடும்..."

"மரணம் வரணும்னா வந்து தான் தீரும்...."

"பாவி இப்பவாது சொன்னயே..."

தலைக்கு வந்த்து தலைப்பாகையோடு போனதே என்பது போல பட்டும் படாமலும்.. அவரவர் பேசினார்கள்... அது ஆறுதலா, தப்பித்துக் கொண்ட நிம்மதியா.. ஒன்றும் புரியாமல் அழுது கொண்டேயிருந்தாள் அன்னபூரணி...

"என்னது.... அன்னபூரணி காலேஜ்ல லவ் பண்ணினாளா... ஹெலோ ஆண்டி என்ன உளர்றீங்க...காலேஜ்ல எனக்கு தெரியாம அவ இல்ல.. யாருமே ஏதும் ஏதுவும் பண்ணிட முடியாது....... இன்னும் சொல்லப் போனா அர்ஜுன்னு யாருமே இல்ல.. அப்படி யாருமே ஆக்சிடெண்ட்ல சாகவும் இல்ல..அவ நல்ல
கதை விட்ருக்கா...." என்ற அன்னபூரணியின் தோழி.. விக்னேஸ்வரி.... 20 ரூபாய் கொடுத்து சிறப்பு வழியில் சாமியைப் பார்த்து விட்டு வேக வேகமாய் சினிமாவுக்கு ஓடினாள்...

"சாரி ஆண்டி சினிமாவுக்கு நேரமாச்சு..."

திகைத்த அன்னபூரணியின் அம்மா... ஒன்றும் புரியாமல் குழப்பத்தோடு வீடு வந்தாள்....

இதே நேரம்... வட நாட்டில் ஒரு கிராமத்தில் இதே போல ஓர் அன்னபூரணி இறந்து போன அர்ஜுனை நினைத்து அழுது கொண்டிருந்தாள்.... நேற்று இங்கே அப்பா இந்த அன்னபூரணியை அறைந்ததால் கன்னத்தில் பதிந்த அச்சுக்களோடு....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (7-Mar-16, 12:03 pm)
பார்வை : 460

மேலே