தலையெழுத்தை மாற்றிய கையெழுத்து28---ப்ரியா

ரியா எங்கு செல்கிறேன்?எதற்கு செல்கிறேன்?என்று வசந்திடம் எதுவும் சொல்லாமலேயே இங்கிருந்து கிளம்பிவிட்டாள்....அவளது இச்செய்கை வசந்தை இன்னும் கஷ்டப்படுத்தியது.....இப்பொழுதுதான் தவறை உணர்ந்து அவளிடம் மன்னிப்புக்கேட்கலாம் என வந்திருக்கிறோம் அதற்குள் இப்படி பண்ணிவிட்டாளே? என்ன பண்ணுவது?? நாம் நடக்கும் விதம் அவளுக்கு சுத்தாமாக பிடிக்காதுதான் அதற்காகதான் இப்படி திடீரென போய் விட்டாளோ? கடவுளே! அவள் விரைவில் வரவேண்டும் என மனமுருகிக்கேட்டுக்கொண்டான்......

அப்பொழுது அந்த டேபிளில் இருந்த ரியாவின் டயரி அவனது கண்களில் பட்டது.....அதை எடுத்தவன் அதை திறந்து கண்கள் சுருக்கி படிக்க ஆரம்பித்தான்......

புதுவருட புதுடயரியில் அவளது வாழ்வில் நடந்த விஷயங்களையும் பிடித்தது பிடிக்காதது என சில விஷயங்களும் கவிதைகளும் தனக்கு வரப்போகும் கணவனைப்பற்றியும் ரசனையோடு நிறைய எழுதியிருந்தாள்......

ஒவ்வொரு பக்கமாக புரட்டிக்கொண்டிருந்தான் படிக்க படிக்க இதமாக இருந்தது...என் மனைவி இவ்வளவு அழகாக கவிதை எழுதும் திறமைக்காரியா?என தனக்குத்தானே கேட்டு பெருமைப்பட்டுக்கொண்டான்.

அடுத்தபக்கத்தை புரட்டியவனின் கண்கள் ஒருநிமிடம் துவண்டுபோனது.....காரணம் அதில் ஒரு ஆணின் படத்தை அதாவது வசந்தின் நிழல் போல் ஒரு படம் வரைந்துவிட்டு....."என் தோழிக்காக முதன் முதலில் ஒருவனை பழிவாங்க களம் இறங்கியுள்ளேன், பயமாகத்தான் இருக்கிறது ஆனாலும் என் உயிர்த்தோழிக்காக இதைக்கூட செய்யவில்லை எனில் எனது அன்பு பொய்யாகிப்போய்விடும் அதனால கண்டிப்பா இவனைப்பழி வாங்கி தோழிக்கு ஆறுதல் தேடி கொடுக்க வேண்டும்" என்று எழுதியிருந்தாள்.........

அடுத்த பக்கத்தில் அழகிய கண்களை வரைந்துவிட்டு "எப்பா இப்படி சுண்டி இழுக்கும் ஒரு கண்களா....இந்த காந்தப்பார்வையில் என்னை ஈர்த்துவிட்டான் யாரிடமும் கண்கள் பார்த்து பேசிவிடுவேன் ஆனால் உன்னிடம் பேசுவது மிகவும் சிரமமாக உள்ளது......என்னவனுக்கான தகுதிகள் அனைத்தும் உன்னிடம் உள்ளன ஆனால் என்னப்பண்றது நீ துரோகி ஆகிவிட்டாயே?உன்னை எப்படி என் மனம் நினைக்கும் நீ ஒரு அயோக்கியன் வசந்த்" என்று சொல்லி அவனது அந்த கண்களை இரு கோடுபோட்டு வெட்டிவிட்டாள்.....

அடுத்தடுத்தப்பக்கத்தில் தோழிகளின் சதி மற்றும் கம்பெனி விஷயமாக வெளியூர் சென்றது என அனைத்தையும் எழுதியவள்......வசந்தின் மீது வைத்திருந்த காதலையும் இடையிடையே எழுதியிருந்தாள்.

வந்தனாவின் சூளுரை கீதுவின் ஊரில் வசந்த் அடித்தது என எழுதியவள் கடைசியாக........

"உன் மனதை கஷ்டப்படுத்திய நான் பாவி மட்டுமல்ல மிகப்பெரிய துரோகி.....எப்படி இனி உன் முகத்தில் முழிப்பேன்......தோழி தோழி என அவள் பின்னால் சென்றதற்கு கிடைத்த வரமா இது? எப்படியும் தவறு செய்தவள் நான் தண்டனையும் நான் தான் ஏற்றுக்கொள்ளவேண்டும் அதனால் உனக்கு காலம் முழுக்க காலடியில் கிடந்து பணிவிடை செய்கிறேன்.....எவ்வளவு துன்புறுத்தினாலும் இன்முகத்தோடு ஏற்றுக்கொள்வேன், உச்சத்தில் போக இருந்த உன்னை தரைக்கு கொண்டுவந்தது நான் தான் ஆகவே அதற்கும் விரைவில் பரிகாரம் தேடிக்கொள்கிறேன் இன்னும் 18 நாட்களில் நம்மிருவருக்கும் ஒரு விமோச்சனம் உண்டு "என்று ஒரு புதிரைப்போட்டு அப்பக்கத்தை முடித்திருந்தாள்.

உன்னை மனதில் முழுவதும் ஏற்றிவிட்டேன் வசந்த் அன்று காதலை வெறுத்ததும் உன்னால்தான் இன்று காதலை விரும்புவதும் உன்னால்தான் மகிழ்ச்சியோடு இருவரும் சேரும் நேரம் நான் உன்னிடம் சொல்லப்போகும் அந்த மூன்று வார்த்தைகள்__ ____ ___?என்று ஆயிரம் முத்தங்களுடன் எழுத்து முழுவதையும் முடித்திருந்தாள் ரியா.......!!

முழுவதும் படித்து முடித்தவனுக்கு மனதில் பாரம் இன்னும் அதிகமானது உடனே ரியாவைபார்த்து.....அணைத்து கதறி அழணும் போல் இருந்தது...........கண்ணீர் விட்டு அழுதான்.......எங்கே போனா ரியா???சீக்கிரம் வா என் மனக்கதவு திறந்தே இருக்கிறது வந்து சேர்ந்துவிடு என நெஞ்சில் கைவைத்து மனதில் பேசிகொண்டே அவள் வரவை நோக்கிக்கொண்டிருந்தான்....??

எழுதியவர் : ப்ரியா (7-Mar-16, 1:15 pm)
பார்வை : 486

மேலே