நிலவைப் பார்த்து

நாங்கள் குரைப்பதால்தான்
நடுவானில் நிற்கிறது நிலா-
நினைத்துக்கொள்கின்றன
நாய்கள்..

நாய்கள் நினைத்து
நடக்கப்போவதென்ன,
தடைபடாது
தளிர்நிலவின் பயணம்,
அது
தொடர்ந்துகொண்டே இருக்கும்..

நாய்கள்,
அவை
குரைத்துக்கொண்டேதான் இருக்கும்,
நடந்திடு உன்வழியில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Mar-16, 7:20 am)
பார்வை : 82

மேலே