தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல்- 28
சகளை..,சகளை….,சகளை….
நீ பண்ணாதடா ரகளை…
எதித்தவீட்டு மகளை
பாத்து அடிக்காதடா விசில..
அகளு பிகளு வுட்டுக்கும்
டகளு டீளூ போட்டுக்கும்
புள்ள பொறந்துப்புட்டா
பிகரு போர் அடிக்கும்
சென்னைவாழ் ஜனத்துக்கு
பண்ணையாரு இல்லடா
மன்னாரும் வண்ணாரும்
இங்கெல்லாரும் ஒண்ணடா
தொண்ணைச்சோறு துன்னாலும்
கண்ணாயிருக்கும் ஊரடா
தண்ணீலாரி வந்துப்புட்டா
தள்ளு முள்ளு தானடா
கூவம் ஓரம் வாழ்ந்தாலும்
கூடி குளவும் வாழ்க்கைடா
கொழுந்தியாள கூட்டிக்கிட்டு
மாயஜாலு போவோம்டா
கோவம்ன்னு வந்துப்புட்டா
சோடா பாட்டலு வீசும்டா
கோவளத்து வழிதடத்தில்
கோமளிகள் அய்ட்டம்டா
குப்பை தொட்டி இருந்தாலும்
குப்பை – குப்பை தொட்டியில் இல்லடா
அந்த கப்பையெல்லாம் ரோட்டில் கொட்டி
பழகி விட்டோம் நாமடா..!
கார்பொரேஷன் கக்கூஸிலும்
கலெக்க்ஷன் ஸ்ட்டுடா
அதனால டிரான்ஸ்பாரம் ஓரத்திலே
ஒரே யூரீன்னு கப்புடா…!
டாஸ்மாக் கடைமுன்னே
ஜாஸ்த்தியான கூட்டம்டா
பாஸ்மார்க் வாங்கியவனும்
டாஸ்மாகுக்கு அடிமைடா..!
ஒருசிலரு- ஊத்தப்பல்ல தொலக்குவதே
ஒயின் ஸாப்பில் தானடா
ஒரு கோட்டருல வாய் கொப்பளிச்சி
அப்படியே முழுங்கும்டா..
ஜாதி மதம் பாக்காத சமத்துவம் தானடா
சென்னைக்கே உரித்தான மகத்துவம் தானடா
நீதி மன்றம் பாக்காத வழக்குகள் இல்லடா
நித்தம் நூறு தீர்ப்புகள் மொத்தமாக வழங்கும்டா
காலேஜி கட்டடிச்சி டீனேஜி சுத்தும்டா
மேரேஜிக்கு முன்னயே ரிகல்சல் பாக்கும்டா
டிரைனேஜி அடைக்காத ஸ்ட்ரீட்ஸே இல்லடா- எதையும்
மேனேஜி பண்ணாதான் சென்னையில லைப்பே ஓடும்டா..!