ஆத்மாவின் அழுகுரல்

ஆத்மாவின் அழுகுரல்

காதலில் சேர்ந்து வாழ்வில் சேர முடியாமல்
மரணத்தில் இணைந்த இரண்டு ஆத்மாக்களின் அழுகுரல் !

காதல் மனங்கொண்டு
கன்னியவளை கரம்பிடிக்க
கவிதை துணை கொண்டு
கடுதாசியை தூதனுப்ப
வீழ்ந்து விட்டாள் அவள் !

வண்ண சிறகு கொண்டு
வான் நோக்கி நான் பறக்க
இணை சேர்ந்து
ஆகாயம் சுற்றி வந்தோம் !

ஆர்ப்பரிக்கும் கடலும்
அமைதியை வெளிபடுத்தும்
புயல் வந்து போனாலும்
அமைதி நிலை திரும்பும் !

சொல்லி கேட்டதுண்டு
நேரிலும் பார்த்ததுண்டு
நேர்ந்து பார்த்ததில்லை அய்யா !

ஆகாயம் சுற்றயில
கடும் காற்றாய்
சாதி வந்து அடிச்சதய்யா !

அரக்க (சாதி) உருவம் கொண்டு
அடக்கப்பட்ட காதலய்யா!

உசுர பறிகொடுத்தா
சாதிவெறி அழியுமுன்னு
போட்ட கணக்கும் தான்
பொய்ச்சி போச்சு
எங்க உசுரும்
வீணா காத்துல கலந்தே போச்சு !

எத்தனை தலைமுறை
அழிந்தாலும்
சாதி(தீ)யம் தான்
நிலை பெற்று நிற்குதய்யா!

எழுதியவர் : தங்கதுரை (9-Mar-16, 4:44 pm)
சேர்த்தது : தங்கதுரை
பார்வை : 607

மேலே