என் காதலை நீ உணரமறுப்பது ஏனடி 555

என்னவளே...
நீ காதோரம் உன் முடியை ஒதுக்கியபோது
உதிர்ந்த ஒற்றை முடியை...
மயிலிறகாக நினைத்து எனது
புத்தகத்தில் வைத்திருக்கிறேன்...
நீ கிழிதெறிந்த என் காதல் கடிதங்களை
பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்...
நான் கொடுத்த மலர்கொத்தை
தூக்கி எறிந்தாய்...
அதே இடத்தில் நந்தவனம்
அமைத்தேன்...
நந்தவனத்தின் காவல்காரனாய்
நான் காத்திருக்கிறேன்...
நீ பூ பறிக்க வருவாய்
என்ற நம்பிக்கையில்...
அப்போதாவது நீ
உணர்வாய் என் காதலை.....