பிரியமானவனே

பிரியமானவனே....
நான்
உன்னோடு வாழ
ஒவ்வொரு நொடியும்
ஏங்குகின்றேன்...
ஆனால்
நீயோ....
என்னை விட்டு
பிரிந்து செல்லவே
ஆசைப்படுகின்றாய்.....!
உன் ஆசை தான்
என் ஆசை...!
அதனால் தான்
நீ பிரியும் முன்
நானே பிரிந்துவிட்டேன்...
உன்னை விட்டு மட்டும்
அல்ல.......
இந்த உலகத்தையும் விட்டு......!