காதல் தீ வைக்கிறாய்
என் கண்ணில் விழுந்தால் வண்ண மின்னல்
அன்றோடு தூக்கம் இழந்தேன் ஏனோ
வானத்து தேவதையாய் வந்து
வேரோடு உயிரை திருடி கொண்டால்
அவள் பாவனைகள் உள்ளே துள்ள
அவள் புன்னகையோ நெஞ்சை கொள்ள
அவள் நினைவுகளில் கண்கள் இழந்த பறவையானேன்
காதலின் இதயம் மெழுகினை போல காதல் தீ வைக்கிறாள்
தீயை ஏற்றுக்கொண்டேன் உடலும் உருகி நின்றேன்
ஆயிரம் சூரியன் உன் விழியா
விழியால் மனதை விழுங்கிவிட்டாய்
என் உயிர் இன்று
உன் நிழலாகி
உன் பாதத்தை சேர்ந்து உன்னோடு வருகிறதே
மனிதனின் சாபம் காதலே என்பேன்
தப்பி பிழைத்தவர் யார்
கனவை அடைந்தவர் யார்
வலியை மறந்தவர் யார்
ஆண்களை துளைக்கும் ஆயுதமாய்
பெண்ணை படைத்தான் ஆண்டவனும்
வேலிக்குள்ளே வேலி வைத்து
அதில் இதயம் வைத்தேன் உடைத்தால் புது கவிதை ....
சொல்லாமல் தொட்டு சென்ற தென்றல் என்ற பாடல் மெட்டில் எழுதப்பட்ட காதல் வரிகள் ....