என் தாரகையே
பொன் மகளே பொன்மகளே
உன்னை பொன்னாலே செய்தாரா?
உன்னை வைரத்தால் நெய்தாரா?
உந்தன் மேனிதனை பார்த்தேன்
உளி கொண்டு செய்தாரோ?
உந்தன் இடையழகை பார்த்தேன்
உறங்கிட இதுபோல் எதுதானோ??
உந்தன் விழியழகை பார்த்தால்
உள்ளுக்குள் மின்னல்கள் வீசுமடி!
உந்தன் இதழழகை பார்த்தால்
உலகில் பூக்கள்தான் எதற்கடி?
பாவை உன்னை பார்க்கும்போதே
பைத்தியம் என்னுள் பிடிக்கிறதே!
பார்த்த நொடியில் கண்ணடித்தால்
பலகோடி எனக்குள் கவிதையே!
உனக்கு பிடித்த இடத்தில் நின்றால்
அந்தஇடத்தின் மதிப்பு அதிகமடி!
உனக்கு பிடித்த ஆடை என்றால்
அந்தஆடை மதிப்பு பலகோடி!
உன்னை காணும் முன்புதான்
நிலவு பூமியில் விழுந்ததடி!
உன்னை கண்ட பின்புதான்
நிலவு வானில் சென்றதடி!
தன் அழகில் தோற்ற நிலவோ
இரவில் மட்டும் தோன்றுதடி!
தேவதை தூங்கும் நேரம்
தன்னை அழுகு என்று சொல்லுதடி!
சிணுங்கும்போதே இசைத்தாயே
உன் கொலுசின் விலை என்னடி?
சின்ன என்உயிர் என்றால்
உனக்காய் தருவேன் சொல்லடி?
இந்த உலகம் விட்டு மேலேபோனாள்
என்னுடன் நீ வருவாயோ?
இந்தகாதல்கொண்டுநாம் வாழ்வோம்
எங்கே நீ?சொல்லாயோ?