நிதர்சனம்

வந்துவிட்டது மின்சாரம்..
தொலைக்காட்சிக்கு கிட்டியது
வாடிக்கையாளர்கள்..
காத்துக்கொண்டிருந்த வீட்டுப் பாடம்
நடை போட்டது..
சமையலறையில் ஆரம்பமானது
இசைக் கச்சேரி..
மீண்டும் தொலைந்து போனது
இருளும் நிலவும்..

எழுதியவர் : (11-Mar-16, 8:37 pm)
சேர்த்தது : இளமதி
Tanglish : nidarsanam
பார்வை : 82

மேலே