இளமதி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இளமதி |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 29-Dec-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 266 |
புள்ளி | : 7 |
வந்துவிட்டது மின்சாரம்..
தொலைக்காட்சிக்கு கிட்டியது
வாடிக்கையாளர்கள்..
காத்துக்கொண்டிருந்த வீட்டுப் பாடம்
நடை போட்டது..
சமையலறையில் ஆரம்பமானது
இசைக் கச்சேரி..
மீண்டும் தொலைந்து போனது
இருளும் நிலவும்..
இட்ட முட்டை சுடுகிறது
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்
ஏக்கத்தோடு பார்த்தது கோழி
^^^
கடத்தல்காரன் கையில் பணம்
வன அதிகாரிகள் பாராமுகம்
ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம்
^^^
காடழிப்பு
ஆற்று நீர் ஆவியானது
புலம்பெயரும் அகதியானது கொக்கு
^^^
குடும்ப தலைவர் மரணம்
ஒன்பது பிள்ளைகளும் ஓலம்
கருத்தடை செய்த நாய் சாபம்
^^^
சட்டம் ஒரு இருட்டறை
கருவறை இருட்டறை
சிசு மர்மக்கொலை
^^^^^
வியர்வை சிந்தாமல் வேண்டாம்
வியர்வை உலர்ந்தபின் வேண்டாம்
ஊதியம்
@
கண் வரைதல் ஓவிய போட்டி
முதல் பரிசு பெற்றான் மாணவன்
பார்வையற்ற மாற்றுத்திறனாளி
@
தொட்டிக்குள் இலை குவிகி
வைரமுத்து !!!
அ . நீங்கள் விரும்பிப் படிக்கும் எழுதும் கவிதை எது ? ஏன்
1. யாப்பு
2.புதுக் கவிதை
3.ஹைக்கூ
4.திரைப் பாடல்
ஆ . இங்கே நீங்கள் எழுதும் கருத்தை விரும்புகிறீர்களா அல்லது நட்சத்திர சொடுக்கையா?
அல்லது இரண்டையுமா ? ஏன்
இ . கவிதைக்கு கணினினி வலைகள் இருக்கும் போது புத்தகம் வெளியிடுவது தேவையா ?
ஏன் ?
விரிந்த வாசகர் வட்டம் கிடைக்கும் என்பதாலா ? அல்லது விற்பனை நோக்கமா ?
அல்லது இன்னும் பிரபலம் அடையலாம் என்ற எண்ணமா ?
அல்லது ஏதோ ஒரு மனத் திருத்தி கிடைகிறது என்பதாலா ?
----கவின் சாரலன்
தென்றலே..
ஒரு முறை உன் பணியை
நான் செய்கிறேன்..
நீ விட்டுப் போன சுவாசம்
பிறந்த இடம் அறிய வேண்டும்..
நான் கொடுத்த சுவாசம்
சேரும் இடம் தெரிய வேண்டும்..
விதி கேட்கும் வினாக்களிடம்
நீயும் நானும் கேள்விக்குறிகளாய்..
வினாக்களுக்கு விடை தெரிந்தும்
தெரியாதது போல் நடிக்க வேண்டியிருக்கிறது
சுற்றத்திற்கு பயந்து..
உன் வினாக்களுக்கு விடையாய்
மாறத் துடிக்கும் என் எதிர்காலமோ
பாசத்தின் உருவில் பயந்து ஒளிகிறது..
என் ஒவ்வொரு நொடியும்
கேள்வியுடன் நகர்ந்த போதும்
என் நெஞ்சத்தின் எதிரொலிகள்
சிறிய வட்டத்திற்குள் சுருங்கிய போதும்
என் வாழ்வின் விடையாய்
நீ வருவாய் என்ற நம்பிக்கையுடன்
என்றென்றும் உன் அன்புக் காதலி..
வரைந்து முடித்தது நிலா
வந்தது விடியல்...
மோதிக் கொண்டன மேகங்கள்
அவிழ்ந்தது மழை..
பிடித்து விட்டேன் நிலவை
கலைந்தது கனவு..
தற்கொலை செய்து கொண்டது ஆறு
பாடியது அருவி..
உவகை கொண்டான் குள்ளன்
மாலையில் நிழல்..
போர்வை விற்றன மரங்கள்
இலையுதிர் காலம்..
விதி கேட்கும் வினாக்களிடம்
நீயும் நானும் கேள்விக்குறிகளாய்..
வினாக்களுக்கு விடை தெரிந்தும்
தெரியாதது போல் நடிக்க வேண்டியிருக்கிறது
சுற்றத்திற்கு பயந்து..
உன் வினாக்களுக்கு விடையாய்
மாறத் துடிக்கும் என் எதிர்காலமோ
பாசத்தின் உருவில் பயந்து ஒளிகிறது..
என் ஒவ்வொரு நொடியும்
கேள்வியுடன் நகர்ந்த போதும்
என் நெஞ்சத்தின் எதிரொலிகள்
சிறிய வட்டத்திற்குள் சுருங்கிய போதும்
என் வாழ்வின் விடையாய்
நீ வருவாய் என்ற நம்பிக்கையுடன்
என்றென்றும் உன் அன்புக் காதலி..