பேசா மொழி

வரைந்து முடித்தது நிலா
வந்தது விடியல்...

மோதிக் கொண்டன மேகங்கள்
அவிழ்ந்தது மழை..

பிடித்து விட்டேன் நிலவை
கலைந்தது கனவு..

தற்கொலை செய்து கொண்டது ஆறு
பாடியது அருவி..

உவகை கொண்டான் குள்ளன்
மாலையில் நிழல்..

போர்வை விற்றன மரங்கள்
இலையுதிர் காலம்..

எழுதியவர் : (26-Feb-16, 5:13 pm)
Tanglish : pesaa mozhi
பார்வை : 112

மேலே