மனம் எழுதும் மடல்
விதி கேட்கும் வினாக்களிடம்
நீயும் நானும் கேள்விக்குறிகளாய்..
வினாக்களுக்கு விடை தெரிந்தும்
தெரியாதது போல் நடிக்க வேண்டியிருக்கிறது
சுற்றத்திற்கு பயந்து..
உன் வினாக்களுக்கு விடையாய்
மாறத் துடிக்கும் என் எதிர்காலமோ
பாசத்தின் உருவில் பயந்து ஒளிகிறது..
என் ஒவ்வொரு நொடியும்
கேள்வியுடன் நகர்ந்த போதும்
என் நெஞ்சத்தின் எதிரொலிகள்
சிறிய வட்டத்திற்குள் சுருங்கிய போதும்
என் வாழ்வின் விடையாய்
நீ வருவாய் என்ற நம்பிக்கையுடன்
என்றென்றும் உன் அன்புக் காதலி..