பார்வையில் பரவசம்
விடியும் முன் வானம் பார்த்தேன் பயணத்தில்,
விடியாதும் வெளிச்சம் உண்டு,
வானமதில் பௌர்ணமி நிலா,
வாகனம் மிதக்கும் மிதப்பில்,
விழி படம் பிடித்தது இயற்கையின் அழகை,
அமர்ந்த நீர் கண்டேன் வெகுதுரம்,
அதன் அழகின் கவர்ச்சியால் கண் மூடாது,
அதென்ன நீர் என்றவண்ணம் பார்த்திருந்தேன்,
அதிகாலை நேரம்,
அகிலத்தின் மன்னவன்(சூரியன்) முகம் காட்ட,
பணிந்த பிரகாச ஒளி வீச,
படர்ந்த நீர் விலக வயல்வெளியின்
பயிர் வரிசை கண்டேன்,
பார்த்த அமர்ந்த நீர், நீரல்ல,
பயிர்கள் கொண்ட
பனி போர்வை என்று அறிந்தேன்,
சூரிய ஒளி, பார்வைக்கு மிதமாகவும்,
சுகமான தூக்கம் முறிந்து எழுந்தேன்,
சுகமா ? நிங்களும் என கேட்கும் வண்ணம்,
சுவை பார்வைக்கும்,
சுகம் உடலுக்கும் அளித்தது ஒளியினால்,
மெல்லிய தென்றலும்,இயற்கையும் உடன் இருக்க,
மிளிர செய்ததது சூரியன்
முகமதில் மெலிதாய் ஒளி வீசி,
மிதமான குளிர்ச்சி அளித்த சூரியன்,
மிரட்டும் காட்சிகொண்டது சட்டென்று,
நேரம் செல்ல செல்ல மிரட்டிய சூரியன்,
நேருக்கு நேர் பார்க்க குளிர்ச்சி அளித்த சூரியன்,
நிமிரவும் விடாது சுட்டது என்னை,
நான் என் வேலையை துவங்கிவிட்டேன்,
நியும் உன் வேலையை பார்; என்னை அல்ல,
நின்றும் பார்த்தும் ரசிக்கும் நேரம் முடிந்தது என்று !!!
அறிந்தேன் ஓய்வும்,விளையாட்டும் அளவே,
அகிலம் காலத்தோடு ஓடும் வண்ணம் உழைக்க வேண்டும் என்று !!!
ஆனந்தம்,விளையாட்டு,ஓய்வு அனைத்தும் கொள்வோம்,
அன்றாட வேலையினை செய்தவாறு !!!!!!!