காதலித்து பார்

காதலித்து பார்

ஆயிரம் ஒலிகள் எழும்பி அடங்கும்
அவள் பெயரோ
அவன் பெயரோ மட்டும்
செவியினுள் அடங்கும்.

நினைவலைகளில் நில்லாமல்
நீந்துவாய்
நித்திரையின் நீளம்
குறைப்பாய்.

பொய்மை ஆயிரம்
புரவியாய் பூட்டி
கவிதை தேர் ஓட்டுவாய்.

வித்தியாசங்கள் காட்டுவாய்
நடையில் உடையில்
விதவிதமாய்.

தனிமை தேடுவாய்
தானாய் பேசுவாய்
பகலும் இரவும்
மறப்பாய்

வேதனையில் சிலசமயம்
புலம்புவாய்
வேடிக்கையாய் சிலசமயம்
புலம்புவாய்

உலைகலனாய் உள்ளுக்குளே
கொதிக்கும்
உமிழ்நீர் வற்றி
உதடுகள் ஓட்டும்
காணாத நொடிகளில் - காண வேண்டுமா

ஆண்மையின் பெண்மையும்
தெரியும்
பெண்மையின் ஆண்மையும்
புரியும்

கடவுளை காதலில்
காண்பாய்
புவியினிலே மோட்சம்
பெறுவாய்..

காதலித்து பார்..

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (26-Feb-16, 12:03 pm)
Tanglish : kadhalitthu paar
பார்வை : 129

மேலே