உழைப்பே உயர்வு
![](https://eluthu.com/images/loading.gif)
உழைப்பே உயர்வு...
பட்டணம்தான்
போனதில்ல
படித்தவரை
பார்த்ததில்ல..
உட்கார்ந்து
பழக்கமில்ல..
நோவு வந்து
படுத்ததில்ல..
உழைக்காம
இருந்ததில்ல..
பணம் காசு
சேர்த்ததில்ல..
சொந்த பந்தம்
பகையுமில்ல..
உழைப்பாலே
உயர்வுதாங்க
சுகமாத்தான்
இருக்குறேங்க..